எட்டாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில், உள்ளூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தும் இலக்குடன் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய பெங்களூர் அணி, தொடக்கத்தில் தடுமாறியது. அதிரடி வீரர்களான கெயில் 10 ஓட்டங்களுடனும் விராட் கோலி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து இணைந்த டிவில்லியர்ஸ், மன்தீப் சிங் ஆகியோர் ராஜஸ்தான் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
மன்தீப் சிங் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டிவில்லியர்ஸ் 57 ஓட்டங்களுடன் வெளியேறினார். 27 ஓட்டங்களுடன் சேர்த்த தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.
பரபரப்பான கடைசி நேரத்தில் சர்பராஸ் கான், பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்டதால் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை குவித்தது. சர்பராஸ் கான் 45 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க காத்திருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கும் என்று காத்திருந்த இரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்ததால் நடுவர்கள் போட்டியை இரத்து செய்வதாக அறிவித்தார்கள். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளும் மழையால் கைவிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment