பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்


பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். 

மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 பந்துகளில் 5 சிக்சருடன் 46 ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். சூர்யகுமார் யாதவின் திறமையை கண்டு வியந்த அணி நிர்வாகம் அவருக்கு உப தலைவர் பொறுப்பு வழங்கியுள்ளது. 

மும்பையைச் சேர்ந்த 24 வயதான சூர்யகுமார் யாதவ், அசோக்-சப்னா தம்பதியினரின் ஒரே மகன் ஆவார். பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள சூர்யகுமார் யாதவ் தனது வலதுகை தோள்பட்டையில் அவர்களின் உருவப்படங்களை வரைந்து பச்சை (டாட்டூ) குத்தியுள்ளார். 

ஏற்கனவே அவர்களின் பெயர்களையும் கையில் எழுதியிருக்கிறார். இது அவர்களுக்கு செய்யும் மரியாதை என்கிறார், சூர்யகுமார் யாதவ்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment