மண்மேடு சரிந்து விழுந்து நான்கு வீடுகள் சேதம்


மண்மேடு சரிந்து விழுந்து நான்கு வீடுகள் சேதம்

நல்லதண்ணி - லக்ஷபான தோட்டம் - எமில்டன் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நேற்று (15) பெய்த கடும் மழையினால் வீடுகளின் பிற்பகுதியிலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மாலை 06.30க்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் நான்கு வீடுகளில் இருந்த 35 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக தோட்ட ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு இவர்களுக்கான உணவு பொருட்களை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது. 

இந்த அனர்த்தத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

இவ் அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment