சாய்ந்தமருது தோணாவில் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது தோணா வீதியின் மேற்குப் புற வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ரக வாகனம் இயல்பாக நகர்ந்து தோணாவுக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நீரில் முழ்கிய மேற்படி வாகனம் கல்முனை மாநகர சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் சேதம் எதுவுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
(பட உதவி: எம்.வை.அமீர்)
0 comments:
Post a Comment