இந்த புதிய காதல் எப்ப முறியுமோ….?

நயன்தாரா, ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக சிம்புடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
 nayanthara-simbu

அதன் பிறகு டைரக்டர் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்கள். இதற்காக பிரபு தேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்து விட்டது. இருவரும் பிரிந்தனர்.

தற்போது படங்களில் நயன்தாரா பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்றும் கூறி வந்தார்.

இந்த நிலையில் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திடீர் நெருக்கம் எற்பட்டுள்ளதாக பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது நயன்தாரா விஜய் சேதுபதியை ஜோடியாக்கி ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காதலை ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment