சாய்ந்தமருதில் சிப்தொர புலமைப்பரசில் வழங்கலும் திவிநெகும உத்தியோகத்தர் கௌரவிப்பும்

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் மற்றும் தமிழ் சிங்கள புதுவருடத்தில் திவிநெகும வங்கியில் பிரிவு மட்டத்தில் கூடுதலான சேமிப்புக்களை சேகரித்த திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச திவிநெகும முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வனிகசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சாந்தரூபன் அனுருத்த, தெய்யத்தகண்டி பிரதேச செயலாளர் விஜித கனுகல்ல, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலை மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசிலுக்கான காசோலையும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக துசித பீ.வனிகசிங்க கடமையேற்றதையிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்களால் வரவேற்று நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment