டிலான், பந்துலவிற்கே ஆக. 17 இல் நஞ்சருந்த வேண்டிய தேவை ஏற்படும் : பிர­தமர்

முன்னாள் அமைச்­சர்­க­ளான பந்­துல மற்றும் டிலான் பெரே­ரா­விடம் உள்ள விஷக்­குப்­பி­களை பாது­காத்து வைத்­துக்கொள்­ளு­மாறும் எதிர்­வரும் 17 ஆம் திகதி அவை அவ­சி­யப்­ப­டு­மெ­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் இடம் பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பின் போது முன்னாள் அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா,பந்­துல குண­வர்­தன ஆகியோர் ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் மத்­திய வங்கி விடயம் தொடர்பில் செயற்பட்ட விதத்­தினால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட ஐக்­கிய தேசிய கட்­சியின் பலரும் நஞ்­ச­ருந்த வேண்டும் என தெரி­வித்­தி­ருந்­தனர். இதற்கு பதில் கூறும் வகை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

ஐக்­கிய தேசிய கட்­சி அர­சாங்­கத்தின் போது மத்­திய வங்கி பிணை வழங்­கலில் இடம் பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் தொடர்பில் ஆராய பாரா­ளு­மன்­றத்தில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­ட­துடன் அதன் அறிக்­கையின் பிர­காரம் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பா­ளர்­க­ளான பந்­துல குண­வர்­தன,டிலான் பெரேரா ஆகியோர் அண்­மையில் செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னரை நஞ்­ச­ருந்­து­மாறு கூறி­யி­ருந்தனர்.

ஆனால் எதிர்­வரும் தேர்­தலின் பின்னர் பந்­துல மற்றும் டிலா­னுக்கே நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­து­கொள்ள நேரிடும் என்­பதில் சந்­தேகம் இல்லை. ஆனால் நாம் அவர்­களை நஞ்­சருந்த கூறி வற்­பு­றுத்­த­வில்லை. அவர்­கள் ஐக்­கிய தேசிய கட்­சியின் நல்­லாட்­சியில் வாழ வேண்டும்.
அத்­துடன் எதிர்­வரும் தேர்­தலின் பின்னர் உருவாகப்போகும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் மத்திய வங்கியில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் தொடர் பில் எதிர்காலத்தில் விசாரணைகள் முன் னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment