தாஜு­தீனின் மர­ணத்­துடன் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் : அமைச்­ச­ரவை பேச்­சாளர் தகவல்

ரக்பி விளை­யாட்டு வீரர் வஸீம் தாஜு­தீனின் மர­ணத்­துடன் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் மூன்று பேர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் வாராந்த ஊடக சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,
இன்று உணவுப் பொதி வழங்­கு­வ­த­னூ­டாக வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யா­து. யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­ப­தனை மக்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இது நல்­லாட்­சியின் விளை­வாகும். நாட்டில் நல்­லாட்சி சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.
ரக்பி விளை­யாட்டு வீரர் வஸீம் தாஜு­தீனின் மர­ணத்­துடன் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் மூன்று பேர் சம்பந்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இது தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. யுத்த களத்தில் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­புக்­களை யுத்தக் குற்­ற­மாக பார்க்க முடி­யாது. அவ்­வாறு பார்த்தால் யுத்தம் செய்ய முடியாது. ஆனால் ரக்பி வீரர் தாஜுதீனின் கடத்தல் மற்றும் கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment