பாராளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்கட்டும்
வென்னப்புவவில் பிரதமர் சவால்
நுகேகொடையில் கூச்சல் போடுவோர் துணிவிருந்தால் மஹிந்தவை பிரதமராக்கட்டும், மக்கள் மீண்டும் ஏகாதிபத்திய ஆட்சியைக் கொண்டுவர விரும்பமாட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத்தா¡ர்.
வென்னப்புவ தும்மலதெனி யவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத்தார். இங்கு உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது,பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில் மக்கள் சக்தியை திரட்டி மஹிந்தவை தோற்கடித்தோம்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் மஹிந்தவின் வாக்கு வங்கியை இன்னும் கீழிறங்கச் செய்வோம். ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த 64 இலட்சம் வாக்குகள் எதிர்வரும் தேர்தலில் இன்னமும் அதிகரிக்கும்.
மஹிந்தவை தோற்கடிக்க முடியாது என்று வீறாப்பு பேசியோர் இன்று வாயடைத்துப் போயுள்ளனர். மீண்டும் கூக்குரலிட்டு நுகேகொடையில் சத்தம் போட்டு மஹிந்தவை பிரதமராக்க சிலர் பகற் கனவு காண்கின் றனர். மக்கள் சக்தி எம்முடன் உள்ளவரை யாரும் மஹிந்தவை பிரதமராக்க முடியாது. 2005 ஆம் ஆண்டு புலிகளின் வாலைப் பிடித்துக்கொண்டே தேர்தலில் வெற்றியீட்டினார்.
புலி வாலைப் பிடித்தும் புலிப் பயத்தை ஒழித்தோம் என்றும் கூறி மக்களை ஏமாற்றும் மஹிந்த கூட்டத்தாரின் முயற்சிகள் இனி வெற்றியளிக்காது. பொதுத் தேர்தலின் பின் தேசிய அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எமது நோக்கம். நாட்டில் மதவாதம், இனவாதம் மீண்டும் தழைத்தோங்க இடமளிக்கப்படாது.
கூட்டுப்படையணியின் ஒன்றரை இலட்சம் ரீசேட்டுகள் இப்பிரதேசத்தில் உள்ளன. இவை பறிமுதல் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும்.
வெற்றிலைச் சின்னமும். கைச் சின்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளது. சு. கட்சிக்கும் ஜனாதிபதியே தலைவர். எந்நிலையில் மஹிந்த எந்தக் கட்சியில் போட்டியிடுவார், எப்படி வெற்றிபெறுவார் எனவே கூச்சலிடுவோர் பாராளுமன்றத்தில் பலத்தை நிரூபித்து பிரதமர் பதவியை முடியுமென்றால் பெற்றுக் கொள்ளட்டும் என பிரதமர் சவால் விடுத்தார்.
0 comments:
Post a Comment