உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்; ஆஸி. நிய+சிலாந்தில் கோலாகல தொடக்க விழா

உலகக்கிண்ணத் தொடரின் தொடக்கவிழா நேற்று அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியு+சிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடந்தன. அவுஸ்திரேலியா, நியு+சிலாந்து மண்ணில் 14 அணிகள் பங்கேற்கும் 11ஆவது உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. மார்ச் 29ஆம் திகதி வரை இத்தொடரில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கவுள்ளன.

இதற்கான தொடக்க விழா, இரண்டு நாள் முன்னதாக நேற்று மெல்போர்ன், கிறைஸ்ட்சர்ச் என இரு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இலங்கை நேரப்படி மதியம் 2.00 மணிக்கு விழா ஆரம்பமானது மெல்பேர்னின் 'சிட்னி மையர் மியு+சிக் பவுல்" என்ற திறந்தவெளி மைதானத்தில் நடந்த விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் 'கிரிக்கெட் வீரர்கள்" கலந்து கொண்டனர்.

முதலில் வீரர்கள் அணிவகுப்பு அடுத்த தொடக்க விழா உரையை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பொப் பாடகிகள் nஜசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமை வெளிப்படுத்தினர்.

நியு+சிலாந்தில் நடக்கும் விழாவில் உள்ளூர் அணிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிச்சர்ட் ஹட்லீ, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்டோர் பங்கேற்;றனர். முதலில் வரவேற்பு நிகழ்ச்சி, அடுத்து பு+கம்பத்தில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரம் மீண்டெழுந்தது குறித்து காண்பிக்கப்பட்டது. நியு+சிலாந்து பாடகி கினி பிளாக்மோர், 'சோல் 3 மியோ" குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன.
 

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment