இந்திய மீனவர்களை சுடுவோம் என ரணில் கூறியது பகிடிக்காகவே!


இந்திய மீனவர்களை சுடுவோம் என ரணில் கூறியது பகிடிக்காகவே!"இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசித்தால் சுடப்படுவார்கள்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது பகிடிக்காகவே என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். 

வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் இதனை மக்கள் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

செய்தியாளர்கள், ரணில் விக்ரமசிங்கவை குழப்பும் வகையில் கேள்விக்கேட்ட போது தமது வீட்டுக்குள் தேவையற்றவர்கள் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு அதிகாரம் உண்டு என்று ரணில் கூறியுள்ளார். 

இதேவேளை இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முயற்சிகளில் இந்தியா உடனிருக்கும் என்பதையே இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் உணர்த்துவதாகவும் சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment