ஜாண்டி ரோட்ஸ் ஏன் மகளுக்கு இந்தியா என பெயர் வைத்தார்?


ஜாண்டி ரோட்ஸ் ஏன் மகளுக்கு இந்தியா என பெயர் வைத்தார்?


















காற்றில் பறந்த படியே ‍களத்தடுப்பில் ஈடுபடும் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தமைக்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு களத்தடுப்பு பயிற்சியாளராக உள்ள ஜாண்டி ரோட்சின் மனைவி மெலானி கடந்த வியாழன் அன்று மும்பை, சாண்டா க்ரூசில் உள்ள சூர்யா தாய் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பிரசவித்தார். 

அந்த குழந்தைக்கு ‘இந்தியா ஜீன் ரோட்ஸ்’ என்று பெயர் வைத்த ஜாண்டியிடம் எப்படி ஒரு நாட்டின் பெயரை உங்கள் மகளுக்கு வைத்தீர்கள்? என்று தனியார் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கேட்க "நாட்டின் பெயரை வைக்கும் கிரிக்கெட் வீரர்களில் நான் முதல் ஆள் இல்லை. ஏற்கனவே பிரெய்ன் லாரா அவுஸ்திரேலியாவின் சிட்னியில், முதல் டெஸ்ட் செஞ்சுரி எடுத்த பிறகு பிறந்த மகளுக்கு சிட்னி என்று பெயரிட்டார். நியூசிலாந்து பவுலர் ‘டியான் நாஷ்’ தனது மகளுக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளார்.” என்றார். 

நீங்கள் வைத்த காரணம் என்ன என்று நிருபர் கேட்க "நான் இந்தியாவில் நீண்ட காலமாக இருந்திருக்கிறேன். எனக்கு இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடு, மிகவும் பிடிக்கும். 

மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆன்மிகமயமான நாடு இந்தியா. ஒவ்வொரு நாளும் இந்த நாட்டு மக்கள் பற்றி நாங்கள் எதாவது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறோம். அதே போல் என் மகளும் புதிதாக கண்டுபிடிப்பாள்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். 

3.7 கிலோ எடையுடன் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறாள் இந்தியா.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment